வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் புதிய கட்சி ஒன்றை நேற்று (22/10) ஆரம்பித்துள்ளார்.
“ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” என்று பெயரிடப்பட்ட இந்த கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசிதரனே பதவி வகிப்பார்.
இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து விலகும் விலகல் கடிதத்தை கையளித்துள்ள அனந்தி சசிதரன், 2013ம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபை தேர்தலில், 87,870 வாக்குகளைப் பெற்றிறு இரண்டாம் நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.