​கோண்டாவிலில் வாள் வெட்டுக்குழுவைத் துரத்தியடித்த மக்கள்

கோண்டாவில் குட்செட் வீதியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்த முயன்ற வாள் வெட்டுக் குழுவை பொதுமக்கள் துரத்தியடித்துள்ளனர்.

நேற்று (16/12/17), மக்களை அச்சுறுத்தும் பாணியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குழுவினரை, கோண்டாவில் பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத வாள் வெட்டுக் குழுவினர் வாள்கள், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மீட்கப்பட்ட வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பவற்றை மக்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் கையளித்துள்ளனர்.jaffna sword gang kondavil

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles