ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
யூரியா உரத்திற்கான தடையால் நாடு பொருளாதாரரீதியில் கடுமையாகப் பாதிப்படைந்தது. யூரியா தடை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் விவசாயிகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கியுள்ளது.
