சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் கஞ்சா கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கஞ்சா போதைப் பொருளை கடத்தியவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles