யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடும் காய்ச்சல் காரணமாக யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு, சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் 11 வயது மாணவன் ஒருவர் கொழும்புத்துறை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்தினுள் இரு சிறுவர்கள் டெங்கினால் உயிரிழந்துள்ளனர். மழைநீர் தேங்கும் இடங்கள் கவனிக்கப்படாத காரணத்தினாலேயே டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன.

இது தொடர்பாக யாழ் சுகாதாரத் துறையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் மக்களும் தமது வீட்டு சூழலில் டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்க பொறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
