இலங்கையில் ஊரடங்கு சட்ட மீறல்கள் அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பொதுமக்கள் மீறிச் செயற்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் (30/03/2020) 7100பேர் வரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டிருப்பதுடன், 1700இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் எட்டு மணித்தியாலங்கள் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles