மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

வடமராட்சி மருதங்கேணி தாளையடிப் பகுதியில் 50 பொதிகளில் பொதிசெய்யப்பட்ட 110kg கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமென கடற்படையினர் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக வடக்கு இலங்கை, கேரள கஞ்சா கடத்தலுக்கான கேந்திர நிலையமாக மாறி வருகின்றது. இரண்டு கிழமைகளுக்கு முன்னர், மன்னார் முசலி பிரதேசத்தில் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg கேரள கஞ்சாவை இலங்கை காவல்துறையினர் கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles