வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” (TMTK) உருவாகியுள்ளது.
C.V.விக்னேஸ்வரன் (TPA), சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), ஸ்ரீகாந்தா (TNP), அனந்தி சசிதரன் (ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்) ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

விக்னேஸ்வரனின் நெருங்கிய அரசியல் சகாவான ஐங்கரநேசன் இந்த கூட்டணியில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபை கலைக்கப்பட்டபின்னர் பல சிறிய தமிழ் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையியிலேயே அதிக கட்சிகளைக் கொண்ட ஒரே ஒரு இனம் தமிழ் இனம்தான்.
உருவாக்கப்பட்ட சிறிய கட்சிகளின் பெயர்களை சாதாரண மக்களால் நினைவில் வைத்திருக்க முடியாதென்பது உறுதி. ஆகவே அக்கட்சிகளின் பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை நாம் இச் செய்தியில் பாவித்துள்ளோம்
TMTK – Tamil Tesiya Kootani
TPA – Tamil People’s Alliance
TNP – Tamil National Party