அரசியல் கட்சியை ஆரம்பித்தார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

‘தமிழ் மக்கள் முன்னணி’  என்ற அரசியல் கட்சியை வடமாகாணசபை முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

தனது பயணத்தை மக்களே தீர்மானிப்பர் என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் ,  தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த அனைவரையும் இணைத்து பயணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பை கடுமையாக சாடிய  விக்னேஸ்வரன், மன்னார் புதைகுழி மற்றும் முல்லைதீவு நில ஆக்கிரமிப்பு பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய் திறக்காமல் இருப்பது அரசின் சலுகைகளைப் பெறவே என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும்
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles