நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகான சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி, சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.

முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ள விக்னேஸ்வரன் அவர்கள், 2009ம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்நீத்த முள்ளிவாய்க்காலில் அமையப் பெற்றுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது நாடாளுமன்ற பயனத்தை தான் இங்கிருந்து ஆரம்பிக்கிறேன் என சத்தியப்பிரமானம் செய்தார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

13.08.2020 இன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டடணியின் தலைவர் C.V.விக்னேஸ்வரன் ஜயா…முள்ளிவாய்க்காலில் இருந்து எனது பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கின்றேன்

Posted by C.V.Wigneswaran on Thursday, August 13, 2020
2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை