விஜயகலா மகேஸ்வரனின் ஆதங்கத்தில் தப்பில்லை

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஒரு நிகழ்வில் ஆற்றியிருந்த உரை தென் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஆற்றிய உரை இதுதான்,

அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் அவரை அப்படி நினைக்க, கதைக்க வைத்த்துள்ளது.

விடுதப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த கருணா அம்மான், கே.பி.பத்மநாதன் மற்றும் முகம் தெரியாத பலரை இலங்கை அரசாங்கம் பாதுகாத்து வருவது தென் இலங்கை அரசியல் வாதிகளுக்கோ, இனவாதிகளுக்கோ தெரியவில்லையா?

அல்லது “விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.” என்று கூறிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விமர்சிக்கும் தைரியம் இனவாதிகளுக்கு உண்டா?

அவர்களுக்கு வந்தால் அது ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி போல இருக்குது இலங்கையில் நடக்கும் கூத்து.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles