15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு

திருகோணமலையில் 1985 இற்குப் பின்னர் தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

வன இலாகா 4,000 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 2,600 இற்கும் மேற்பட்ட ஏக்கர், துறைமுக அதிகார சபை 5,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர், பெளத்த பிக்குகள் விகாரைகள் அமைக்க ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் என தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மீட்க அதிக தமிழர் பிரதிநிதித்துவம் தேவை எனவும், எனவே 80 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தால் இரு தமிழ் பிரதிநிதிகளைப் பெறலாம் எனவும் குகதாசன் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles