சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய திருநெல்வேலி பாற்பண்னையின் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின்போது எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எதனையும் இரு மாதங்கள் கடந்தும் நிவர்த்தி செய்யாமையினால், நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பாற் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றினால் 70,000 ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.