தமிழகத்தில் மேலும் 10 இலங்கையர்கள் தஞ்சம்

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் மூன்று மாதக் குழந்தை ஒன்றும் உள்ளடங்கும்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 10 பேர் நேற்று (05/11) தனுஷ்கோடி பகுதியில் கரைசேந்துள்ளனர். கரையோர காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர், இவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டில் இதுவரையில் 198 இலங்கையர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles