செல்வம் அடைக்கலநாதன் தலைவராக உள்ள TELO கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீகாந்தா, ‘தமிழ்த் தேசியக் கட்சி’ (TNP) எனும் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்த கட்சியின் தலைவரான ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளராக சிவாஜிலிங்கத்தையும், உப தலைவராக சிவகுருநாதன் என்பவரையும் நியமித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சிறுபான்மை மக்களுக்கு சாதகமற்றதொன்றாகவே காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் மேலும் மேலும் பல சிறிய காட்சிகள் உருவாவது, தமிழினத்தை மேலும் பின்னோக்கி கொண்டு செல்லும் என்பது வெளிப்படை.
ஏற்கனவே முன்னாள் வடமாகாண முதல்வரால் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் முன்னணி‘ பல வகையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.