Sumanthiran – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி தவிர்த்து) சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சஜித் பிரேமதாசாவை விட 4,489 வாக்குகள் மட்டுமே குறைவாகும்.

இவ்வாறானதொரு நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவது மேலும் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியே இம்முறை பாரிய சரிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. மேலும் மற்றைய தமிழ்க் கட்சிகளின் வாக்குகளும் சரிவை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது.

அரசியல் நாகரீகம் கருதி, தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதைத் தவிர்த்தது போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது சுமந்திரன் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்திருக்க வேண்டும்.

இன்னொரு கட்சியின் முடிவுகளில் சுமந்திரனை தலையிடும்படி எவரும் கேட்கவில்லை. தனது கட்சியிலுள்ள பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆதரவு கொடுக்கத் தெரிந்த சுமந்திரனுக்கு, தனது கட்சியின் வாக்கு வங்கிக்கே ஆப்பு வருகிறது என தெரியும்போது அதைத் தக்க வைக்க சஜித்துடன்  தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.

எமது தமிழ் அரசியல்வாதிகள் சேர்ந்தும் பயணிக்க மாட்டார்கள், எதிர்த்தும் அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்காண திராணி அற்றவர்களாகவே வடக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.

என்னதான் நேர்மை நீதி என இவர்கள் சொன்னாலும், அவர்கள் செய்வது புனிதமான அரசியல் இல்லை என்பதை யாழ்  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட சில ஆயிரம் வாக்குகள் சஜித் அணிக்குக் கிடைக்கலாம்.

இந்த தேர்தல் கடந்த கால தேர்தல்கள் போன்றதல்ல. 396பேர் போட்டியிடும் தேர்தலில், கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து, தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

– மாற்றம் ஒன்றே மாறாதது –

The post ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்….. சுழட்டி அடிக்கும் சுமந்திரன்
ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) அங்கம் வகித்து, இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் டெலோ, புளொட் போன்ற கட்சிகளையே சுமந்திரன் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். 90களில் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில் டெலோ மற்றும் புளொட் செய்த கொடுமைகளை சுமந்திரன் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

அதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சுமந்திரன் “மாம்பழத் திருடர்கள்” என வர்ணித்துள்ளதுடன், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேணும் எனவும் கேட்டுள்ளார்.

அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுத்த C.V.விக்னேஷ்வரனையும் சுமந்திரன் விட்டுவைக்கவில்லை. (அபலைப் பெண் என C.V.விக்னேஷ்வரன் குறிப்பிட பெண் உண்மையில் அபலைப் பெண் அல்ல. அவர் கோடீஸ்வரி என்பது பலருக்குத் தெரியாது).

மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு பகிரங்க சவால் விட்ட சுமந்திரன், மதுபானசாலைக்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியுமா எனவும் கேட்டுள்ளார். அநுர அரசாங்கம் அந்த தகவல்களை வெளியிட்டால், அதில் தன்னுடன் சேர்ந்து போட்டியிடும், தன்னுடன் முழுமையாக ஒத்துழைக்காத ஶ்ரீதரனுடைய பெயர் இருந்தால்,ஶ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய பின்னடவு ஏற்படலாம் என  சுமந்திரன் கருதி இருக்கலாம்!! இதன் மூலம் ஶ்ரீதரனையும் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம் கட்டலாம் என சுமந்திரன் கணக்கு போட்டிருக்கலாம்!!

கடந்த தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் ஶ்ரீதரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் அவர் தொடர்ந்தும் சுமந்திரனின் வழியில் முழுமையாகச் செல்லாமல், மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், புளொட், டெலோவுடனும் நட்பைப் பேணி வருகிறார். மேலும் ஶ்ரீதரன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை அவசர அவசரமாக சென்று சந்தித்தன் காரணமும் சற்று மர்மமாகவே உள்ளது.

தமிழருக்கு தமிழ்க் கட்சிகளால் இதுவரை எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை. 2015ல் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசுடன் மிக மிக நெருக்கமாக இருந்தும் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம், அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியாத நிலமையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வாறு பாரம்பரிய கட்சிகளை நம்புவது என்பதும் இன்று தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.

சட்டப் புலமை கொண்ட சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாறுவாரா, சிதைத்துவிடுவாரா என்ற ஒரு பாரிய சந்தேகமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது. புலம்பெயர் தமிழர்கள், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரினதும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ள சுமந்திரன், இம்முறை தேர்தலில் புதியவர்களுடன் களம் இறங்குகின்றார். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது என்பதை நவம்பர் 15ம் திகதி தெரிந்துகொள்வோம்.

The post கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்…..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி
வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால்  சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்சியின் கொழும்புக் கிளை பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதால், அவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பல இளம் படித்த இளைஞர்களும், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவை எதிர்த்து கட்சியில் இருந்து தாம் விலகுவதாக சமூக வலைத்தள்ங்களில் தெரிவித்து வருகின்றனர். (இவர்கள் எல்லோரும் வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை!!!!)

கடந்த 2020 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிராஜின் மனைவியும் தனக்கு வேட்பு மனு கிடைக்காததால், தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் (சங்கு சின்னம்) இணைந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தமிழரசுக் கட்சியின் இந்த முடிவிற்கு சுமந்திரன் ஒரு பிரதான காரணியாக இருக்கிறார் என்பது கட்சிக்காரர்களுக்குத் தெரிந்த போதும், அவரை எதிர்க்க முடியாத அளவிற்கு சுமந்திரன் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்தியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவிற்குப்பின்னர் இடம்பெறும் முதல் பொதுத்தேர்தலிலேயே கட்சிக்குள் பல பிரச்சனைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்குப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததால், ஏனைய தமிழ்க் கட்சிகளான புளொட், டெலோ, EPRLF, விக்கி அணி போன்றன முதலே தமிழரசுக் கட்சியினுடைய தொடர்புகளைத் துண்டித்து, தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.

“வீடு” சின்னத்திற்கு (மட்டும்) மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இருப்பினும் சங்கு, சைக்கிள், EPDP, அங்கஜன் அணி, CV.விக்னேஸ்வரன் அணி என பலத்த சவால்களுக்கு அப்பால், ஜனாதிபதி அநுரவின் திசைகாட்டியின்(NPP) செல்வாக்கையும் வீடு (தமிழரசுக் கட்சி) சமாளிக்க வேண்டும்.

சுமந்திரனின் சகாக்களாக களமிறங்கும் வேட்பாளர்கள் படித்த, ஓரளவு செல்வாக்குடைய புதிய வேட்பாளர்களாக இருப்பினும், யாழ் மக்கள் மத்தியில் இவர்கள் தொடர்பான கருத்து/நிலைபாடு என்ன என்பதை வரும் நவம்பர் 15ம் திகதி நாம் அறிந்து கொள்ளலாம்.

யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் விபரம்
1-M.A.சுமந்திரன்
2-S.ஶ்ரீதரன்
3-E.ஆனோல்ட்
4-K.சயந்தன்
5-S.சுகிர்தன்
6-S.C.C.இளங்கோவன்
7-சுரேக்கா.S
8-கிருஷ்ணவேணி.S
9-T.பிரகாஷ்

The post சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு  பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் தொடர்பான எவ்வித திட்டமும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா பட்ஜெட் தொடர்பாக குறிப்பிடுகையில், பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்தவொரு பரிந்துரையையும் ஜனாதிபதி இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லை. நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பான ஜனாதிபதியின் திட்டங்கள் மட்டுமே இந்த பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டத்தில் தோட்ட தொழிழாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சிய போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

The post வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகுவதாக, சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே செந்தில் தொண்டமான் சவால் விடுத்துள்ளதுடன், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.

நீங்கள் 12 வருடங்களாக 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை
கடந்த நல்லாட்சி அரசிற்கு ஆதரவளித்த உங்களால், சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை
நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை, முடிந்தால் நான் மாகாணசபை அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு ஆற்றிய சேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வாருங்கள்
இரவில் பிரதமரையும், ஜனாதிபதியை சந்திக்கும் உங்களால், மக்களின் பிரச்சனை பற்றிப் பேச முடியவில்லை

மேலும் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியுடன் 20 வருடங்களும், மகிந்த அரசுடன் 15 வருடங்களும் பணியாற்றியுள்ளோம். மக்களுக்கு சேவையாற்றுவதே எமது பிரதான நோக்கமே தவிர, யார் ஆட்சியாளர்கள் என்பதல்ல என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

The post சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

நேற்று(20/04/22) இரவு பிரதமரின் அழைப்பின் பெயரில் அலரிமாளிகை சென்ற சுமந்திரன் அவர்களுக்கும், பிரதமருக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுதல், அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமருடனான சந்திப்புத் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கையின் பிரபல பத்திரிகை வீரகேசரிக்கு வழங்கிய முழுமையான தகவல்களை பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் தீப்பந்தப் போராட்டம்
நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்தப் போராடம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனநாயகத்திற்காக ஒன்றினைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழ் பண்ணை பாலம் அருகே இரவு 7 மணியளவில் ஆரம்பமான தீப்பந்தப் போராட்ட பேரணியில் அரசாங்கத்திற்கு எதிராக பல கோசங்கள் எழுப்பட்டன.

The post யாழில் தீப்பந்தப் போராட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யார் புதிய பிரதமர் ???
மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக நிலைமை தோன்றியுள்ளது. புதிய இடைக்கால அரசில் யார் பிரதமர், எத்தனை அமைச்சுக்கள் அமையவுள்ளன என்பது பற்றி எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை.

இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் மட்டும்) என முக்கிய கட்சிகள் மற்றும் கூட்டணிகள் நாடாளுமன்றில் உள்ளன.

இதில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரே வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும், ரணிலே சரியான தெரிவு என இன்னொரு அணி தெரிவித்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு வரும் வாரங்களில் இருந்து ஆரம்பிக்க உள்ளதால், ரணிலை பிரதமாராக நியமித்து சர்வதேச சவால்களைச் சமாளிக்கும் திட்டத்தை சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் வகுத்துள்ளார்கள் எனவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை புதிய அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறாயின் சஜித் பிரேமதாசா பிரதமர் இல்லையா?????

The post யார் புதிய பிரதமர் ??? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்தால், அரசிற்கெதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தாம் பிறப்பித்துள்ள அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நிராகரிக்குமாறு சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்
— M A Sumanthiran (@MASumanthiran) April 1, 2022

The post அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக தமது கட்சி ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருந்ததாகவும், இறுதியில் வரும் செவ்வாய்க்கிழமை தம்மைச் சந்திக்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம்  இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணத் தவறுமாயின், இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் மீளக் கட்டியெழுப்ப முடியாது எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

The post ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.