“இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது பலரும் அறியாத விடயம்.
வாழ்வாதார பிரச்சனைகள், புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், சமூக அந்தஸ்து இல்லாத நிலை, வெளிநாட்டிற்குச் செல்ல முடியாத நிலை போன்ற பல விதமான இடர்களின் மத்தியிலேயே முன்னாள் போராளிகள் வாழ்க்கையைக் நடத்தி வருகின்றனர்.