தமிழ் மக்களின் ஆறு முக்கிய கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எழிச்சிப் பேரணி கடந்த திங்கட்கிழமை (16/09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நல்லூர் ஆலய முன்றல் மற்றம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் ஒன்றிணைந்த பின்னர் அங்கு எழுகதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
ஆறு முக்கிய கோரிக்கைகளாவன,
1- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துதல்
2- எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல்
3- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்துதல்
4- போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல்
5- தமிழர் பிரதேசத்தில் ராணுவ மயமாக்கலை நிறுத்துதல்
6-தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல்

பல வகையான எதிர்ப்புகளின் மத்தியில் சிறப்பாக நடைபெற்ற எழுக தமிழ் எழிச்சிப் பேரணியில் வடமாகாண முன்னாள் முதல்வர் திரு.விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
