உங்கள் வாக்கு, உங்கள் பலம்

இன்று (05/08) இலங்கையின் 16வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது.

சிறுபான்மையினரின் வாக்கு பலம் இலங்கை அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகும். எனவே அனைத்து தமிழ், முஸ்லிம் உறவுகள் தமது வாக்கினை தவறாது அளித்து, சிறுபான்மையினரின் பலத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

திட்டமிட்ட வகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், தமிழர் பிரதேசங்களில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட்டு உங்கள் வாக்கினை அளிக்கவேண்டும்.

சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் தமிழ் உறுப்பினர்கள், தாய் கட்சியின் சின்னத்தில் போட்டியிடாமல், வெவ்வேறு சின்னங்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிடுகிறார்கள். இவர்களை மக்கள் இனம்கண்டு, முற்றாக நிராகரிக்க வேண்டும்.

வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அட்டையுடன், தவறாது செல்லுபடியாகும் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றின் காரணமாக சுகாதார நடைமுறைகள் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே அவற்றைப் பின்பற்றி உங்கள் பொன்னான வாக்கினை அளித்து, உங்கள் பலத்தினை வெளிப்படுத்துங்கள்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles