பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்

நேற்றிரவு (08/01) பளையில் இனம்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைத்துள்ளார்.

மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலக்கானவராவார்.

குறிப்பிட்ட சில மாதங்களில் பளைப் பிரதேசத்தில் இடம்பெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை காவல்துறையினர்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles