வட மாகாணத்தில் இன்று ஹர்த்தால், கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

வட மாகாணத்தில் இன்று (25/02) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகளைக் கடக்கும் இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் காலை 8.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வர்த்தகசங்கங்கள், பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், யாழ் பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யம், மற்றும் பல பொது அமைப்புக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். இதனால் இன்று வழமையான வடமாகாண செயற்பாடுகள் முற்றாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வுகள் இன்று ஆரம்பிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles