இலங்கை விமானப்படை நவாலி தேவாலயத்தில் நரவேட்டையாடிய கரி நாள் இன்று (09/07)

​​யாழ்ப்பாணம், நவாலி தேவாலயத்தில் இலங்கை வான்படையின் புக்காரா விமானம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 150பேர் வரையில் கொல்லப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் நிறைவடைகின்றது.

09/07/1995 ஞாயிறுக்கிழமை இலங்கை அரசு மேற்கொண்ட ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது, இலங்கை வான்படையின் புக்காரா விமானம் நடத்திய தாக்குதலில் 150 பேர் வரையில் உடல் சிதறி உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயமுற்றிருந்தனர்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படைகளால், குறிப்பாக விமான படையினரின் பல தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பினும், நவாலி தேவாலய தாக்குதலிலேயே ஒரே நேரத்தில் அதிக மக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Navaly church massacre sri lanka air force

உண்மையிலே இது ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல். ஒரு கத்தோலிக்க தேவாலயம் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோதும், ஐநா சபையோ, வத்திக்கான் நிர்வாகமோ இலங்கை அரசிற்கு எதிராக எவ்விதமான கடும் நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை.

Latest articles

Similar articles