நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ட்விட்டர் பதிவிற்கு, இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் சிறப்பானதொரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குப்  பதிலாக, இலங்கை மக்களைச் சந்தித்பது சிறப்பாக இருக்கும் என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

இதற்கு கனடா உயர் ஸ்தானிகர் “பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் யாருடன் சந்திப்பை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Namal Rajapaksa Canada high commissioner

மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles