பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பலர் கைது

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதில் ஆசிரியரும், மாணவர் ஒருவரும் வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அறிய முடிகிறது.

பல இளவயது மாணவர்களைப் பயன்படுத்தி, மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்லாமல், பாலியல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்தும் வைத்திருந்துள்ளார் அந்த காமுக ஆசிரியர்.

அந்த வீடியோக்களை காண்பித்து மாணவிகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளனர் ஆசிரியரும் மாணவர்களும்.

இறுதிப் போர் முடிவுற்ற பின்னர் இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டம் இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் பூரண கண்காணிப்பில் உள்ளது. இருப்பினும் அங்கு போதைபொருள் பாவனை, குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் மிக அதிகம்.

மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் புலனாய்வுப் பிரிவினர் மீதுள்ள பயம் காரணமாக, முல்லைதீவில் இடம்பெறும் பல குற்றச் செயல்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை.

மணலாறைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் தமிழ் மக்களை மெது மெதுவாக வெளியேற்றும் நிகழ்வை சிங்கள இனவாத அரசு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
மக்களை வறுமைக்கோட்டினுள் வைத்திருத்தல்,
புத்த விகாரைகளை நிறுவுதல்,
போதைப் பொருள் பாவனை,
பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆயுதங்களைப் பாவித்து தமிழ் மக்களை மெது மெதுவாக அவர்களது சொந்த மண்ணிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இடம்பெறும் என்பதுதான் நிதர்சனம்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles