வவுனியாவில் 694வது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நேற்று (15/01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கமோ, தமிழ் அரசியல்வாதிகளோ எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தலையிடவேண்டும் என வெளிப்படையாகக் கோரியுள்ளனர்.
