நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது – C.V.விக்னேஸ்வரன்

அமைதியான வழியில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்யவேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் திரு.C.V.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என நான் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர், எமது மக்கள் சுதந்திரமாகவும், சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த வீரர்கள், எப்பொழுதும் எமது மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles