திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவை பிடுங்கி எறிந்த சில கத்தோலிக்க மக்கள்

மன்னாரில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவாலயமான திருக்கேதீஸ்வரர் ஆலய நுளைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த வளைவை சில கத்தோலிக்க மக்கள் (பெண்கள்உட்பட) பலவந்தமாக பிடுங்கி எறிந்துள்ளனர். 

இந்துக்களின் புனித விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரதம் நடைபெறும் இந்த நேரத்தில், இந்த துரதிஷ்ட்டமான செயல் இடப்பெற்றுள்ளமை (இடம்பெற்ற விதம்), உலகிலுள்ள இந்து மக்களின் மனதில் கவலையை மட்டுமின்றி கோபத்தையும் உண்டுபண்ணியுள்ளது.

சம்பந்தப்பட்ட மக்கள் வளைவு தொடர்பாக சில காரணங்களைக் கூறிகின்றபோதும், காவல்துறை, நீதிமன்றங்கள் இருக்கும்போது, வளைவை அகற்றுவதற்குரிய அதிகாரம் சாதாரண மக்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும்.

சம்பவம் நடைபெறும்போது கத்தோலிக்க பாதிரியார் ஒருவரும் அங்கு இருந்துள்ளார். இருப்பினும் அவர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குறிய விடயமாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோல் எந்த கரிசனையும் காட்டவில்லையென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles