நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் – மணிவண்ணன்

அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலத்தப்பட்ட மணிவண்ணன், தான் தொடர்ந்தும் அப்பதவிகளை வகிப்பதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தன்னை பதவி நீக்கம் செய்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது, எனவே நான் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார். கட்சியினால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் மறுப்பதாகவும், அது தொடர்பான பதில் கடிதத்தினை தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியம் நலிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட மணிவண்ணன், தான் கட்சியிலிருந்து விலகி தனி வழி சென்று மேலும் தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கட்சியின் வேறு உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றியிருக்கவில்லை. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளுக்கு இதுவரை வேறு ஒருவரும் கட்சியினால் நியமிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/VishnuTNPF/videos/736766427164106
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles