முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் – மங்கள வேண்டுகோள்

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கு தொழில் வாய்ப்பை வழங்­கு­மாறு கூட்­டு­ற­வுத்­து­றை­யி­னர் மற்­றும் வர்த்­த­கர்­க­ளி­டம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை நிதி அமைச்சு தொழில் வழங்குனருக்கு திருப்பித்தரும் என அமைச்சர் உத்தரவாதம் வழங்கினார்.

ஒருகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய போராளிகளை, வடக்கில் மக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எவருமே கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான முன்னாள் போராளிகள் பிச்சை எடுக்கும் நிலையிலுள்ளனர்.

நிதி அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, வர்த்­தக சமூ­கத்­தி­னர் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யவேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles