கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

நேற்று (21/02) மாலை மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடி என்பவற்றை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம்” என்பதே கட்சியின் பெயராகும். கட்சி கொடியானது, வெண்ணிற பின்புலத்தில் சிவப்பு,வெள்ளை நிறத்திலான இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam Kamal haasan

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்குபற்றியிருந்தார்.

இங்கு பேசிய கமல்ஹாசன், “நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள், விரல் சுடும், இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்” என்று குறிப்பிட்டார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles