காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் “மார்கழி திருவாதிரை” (ஆருத்ரா தரிசனம்) உற்சவத்தில் பங்குபெற இலகுவாக, காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில், வடபகுதி சிவபக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க, இந்திய அரசு இந்த விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பெருமளவான பக்தர்கள் இந்த உற்சவத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles