காரைநகர்-ஊர்காவல்துறை அரச படகுச் சேவை இடைநிறுத்தம்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் காரைநகர்-ஊர்காவல்துறை இடையே இடம்பெற்றுவந்த அரச படகுச் சேவை கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட படகுச் சேவைக்கு, வாரத்திற்கு 500 லீட்டர் மண்ணெண்னை தேவைப்படுவதுவதாகவும், யாழில் மண்ணெண்னைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் படகுச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட தனியார் படகுச் சேவைகள் இடம்பெறினும், கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles