காடையர்களுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட பிக்கு

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மிகவும் திட்டமிட்டு நடந்ததை சில CCTV காணொளிகள் காண்பித்துள்ளன. அத்துடன் பௌத்த பிக்கு ஒருவரும் கலவரத்தில் ஈடுபடுவதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.

 

காடைத்தனத்தில் ஈடுபடுபவர்கள் ஓரிடத்திலிருந்து திட்டமிட்டபின்னர் குழுவாக அணிவகுத்து வருவது தெளிவாக காணொளியில் பார்க்க முடிகிறது.

மேலும் காவியுடுத்திய பௌத்த பிக்கு மிகவும் வெறித்தனத்துடன் தனது காடைத்தனத்தை வெளிப்படுத்தியமையும் காணொளியில் காணமுடிகிறது. பிக்குவின் வெறியாட்டத்தை பாடசாலை சிறுவர்கள் இருவர் பார்த்தபடி செல்கிறார்கள். நற்பண்புகளை போதிக்கவேண்டிய பிக்கு, சிறுவர்களின் முன்னால் காடைத்தனத்தில் ஈடுபடுவது அந்த சிறுவர்களின் மனதிலும் தீய எண்ணங்களையே ஏற்படுத்தும் என்பதைக்கூட யோசிக்காமல் மிருகத்தனமாக கலவரத்தில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு எத்தனை பிக்குகள் தமது காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டினார்களோ தெரியாது. எனினும் இவ்வாறான பிக்குமாரை காவல்துறையினர் கைது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.!

​​முழுமையான காணொளி,

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles