கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

வவுனியா வடக்கு கனகராயன்குள காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் மிலேச்சத்தனமான தாக்குதலில் தந்தை (வயது 42) உட்பட, மகள் (வயது 14) மற்றும் மகன் (வயது 16) என மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் உணவகத்தின் உரிமையாளரிற்கு நெருக்கமான கனகராயன்குள காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, உணவகத்திற்கு காணி வழங்கிய நில உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலை தடுக்க வந்த நில உரிமையாளரின் மகனை கழுத்தை நெரித்து தள்ளியுள்ளார். கைக்குழந்தையுடன் கணவனைக் காப்பற்ற வந்த மனைவியை தள்ளி விழுத்தியுள்ளார். மற்றும் நில உரிமையாளரின் மகளை காலால் எட்டி வைத்தில் உதைந்துள்ளர்.

ஊர் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மீது மாங்குள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles