12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

​தமிழ் தேசியத்தின் சிறந்ததொரு நேர்மையான அரசியல் தலைவராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மட்டக்களப்பில், 2005ம் ஆண்டு 24ம் திகதி நள்ளிரவு நத்தார் திருப்பலியின்போது, இலங்கை அரசின் கைக்கூலிக்களால் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ் தேசியத்திற்கு அன்னார் ஆற்றிய சேவைகளை மதித்து, தமிழீழ விடுத்தலைப் புலிகள் ‘மாமனிதர்‘ விருது வழங்கியிருந்தனர். அத்துடன் வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

கொலை செய்யச் சொன்னவர்களும், செய்தவர்களும் இன்னும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனையான ஒரு விடயம்.

நல்லாட்சி அரசாங்கமும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles