யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (16/03) இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பெருமளவான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

>> இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் இடம்பெறவேண்டும்,
>> ஐ.நா பாதுகாப்புச்சபை இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டும்,
>> ஐ.நா மனித உரிமை பேரவையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது, போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் பேரணி இடம்பெற்றிருந்தது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் வடமாகாணசபை முதல்வர் C.V.விக்னேஸ்வரன் மற்றும் சில முன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான பேரணி, யாழ் மாநகர மைதானத்தை சென்றடைந்து பிரகடன அறிக்கை வெளியிடப்பட்டு நிறைவிற்கு வந்தது.

Latest articles

Similar articles