ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் அனைத்தும் வரும் ஜனவரி 15ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாஹோ (மஹவ) சந்தியிலிருந்து புகையிரத பாதகைகள் சீரமைக்க வேண்டியுள்ளதால் ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு, கொழும்பு – யாழ் புகையிரத சேவையே அதிக இலாபம் ஈட்டிக் கொடுக்கும் சேவையாகும். ஐந்து மாதங்கள் யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதால், இலங்கை புகையிரத திணைக்களம் பல கோடி ரூபாய் வருவாயை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles