யாழ் குடாநாட்டில் 41பேர் கைது

sword attacks jaffna
யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் ​SP.ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் கடந்த இரு நாட்களாக மேட்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களால், அனைத்து காவல்துறையினரது விடுமுறைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles