மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21 முதல் 27 வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை உலகமெங்கும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையாகும்.

கடந்த பல வருடங்களாக கோத்தபாயவின் ஆட்சியில், மாவீரர் வாரம் அனுஷ்டிப்பதில் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித தடைகளை ஏற்படுத்தாத போதும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles