ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

​​இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் யாழ் விஜயத்தை எதிர்த்து சிறு அளவிலான ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெறுகிறது.

(நன்றி, படங்கள் : பதிவு இணையத் தளம்)

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி இன்று (19/03) யாழ்ப்பாணம் வருகிறார். இக்கல்லூரியின் முன்னாள் அதிபரான பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் 2009ம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் போராளிகள் மற்றும் பொது மக்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்திருந்தார்.

(நன்றி, படங்கள் : பதிவு இணையத் தளம்)

ஆனால் இன்றுவரை பாதிரியார் உட்பட சரணடைந்த எவரும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் இருக்கின்ற நிலையில், அதற்க்கு பொறுப்பு கூற வேண்டிய இலங்கை அரச தலைவர், உரிய பதில் எதுவும் கூறாமல் கட்டட திறப்பு விழாவிற்கு வருவதை தாங்கள் எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles