யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம்

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருடன் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோரும் பயணித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள டெரென்ஸி மாநரக சபையின் முதல்வர் Aude Largade அவர்களை மணிவண்ணன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புத் தொடர்பாக டெரென்ஸி மாநரக சபை முதல்வர் தெரிவிக்கையில், டெரென்ஸி நகருக்கு யாழ் முதல்வர் மணிவண்ணனை வரவேற்பதில் தான் பெருமையடைவதாகவும், போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பிரான்சின் IDF பிராந்தியத்தில் குடியேறி 30 வருடங்களுக்கு மேலாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்புத் தொடர்பாக முதல்வர் மணிவண்ணன் அவர்கள் தெரிவிக்கையில், தான் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் தமிழர்களின் பொருளாதார வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles