யாழ் மாநகர சபையின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஈபிடிபி கட்சியின் பத்து உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழ் காங்கிரசின் பத்து உறுப்பினர்களும் மணிவண்ணனிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆனோல்ட் இருபது வாக்குகளைப் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனோல்ட்டிற்க்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
வாக்கெடுப்பில் தமிழர்சுக்கட்சி உறுப்பினர் ஒருவரும், மற்றும் மூன்று தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர்களும் பங்குபற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.