யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினரின் பிரிவிற்குட்பட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பெண்ணொருவர் உட்பட மூவர் காயப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தவர்களுகு இடையூறு விளைவித்து, பொல்லுகளால் தாக்குதல் நடந்தியிருந்தனர். இவர்களின் தாக்குதலை தடுத்து எதிர்த்ததினால், மேலதிகமாக வந்த 20இற்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தி காயப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், தேர்தல் ஆணையகத்திற்கும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.