யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும், பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (55) மீது நேற்று (28/05) அதிகாலை 4 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடும் காயங்களுக்கு உள்ளான இராஜேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.