நாளை மறுதினம் 11ம் திகதி முதல் யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்புமென யாழ் அரச அதிபர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், ஏறக்குறைய இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ள யாழ் மாவட்டத்தில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெறும் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, உணவகங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து துறையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.