யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச பொலிசார் இரண்டு மாத சிசு உட்பட மூவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
ஒரு குடும்பம் பயனித்த வாகனம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முற்பட்ட இருவர் வாகனத்திற்கு முன்னால் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் இருவரும் நிறை போதையில் இருந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிசார் வாகன சாரதியிடம் அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன பத்திரங்களை கேட்டுள்ளனர். இருப்பினும் அந்த சாரதி போக்குவரத்து பொலிசாரை வரவழைத்தால் காட்டுகிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொலிசார் அந்த சாரதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனை தடுக்கச் சென்ற கைக்குழந்தையுடன் இருந்த மனைவியையும் தாக்கியுள்ளதுடன், குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசியும் உள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சீருடையில் வந்த பொலிசார், சாரதியை கைது செய்ததுடன், வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் வைத்தும் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ இணைப்பு –> https://www.facebook.com/share/r/8mHxRWawaZJ9A1Pn/?mibextid=WC7FNe
மேற்படி சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட பொலிசார் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி ந.காண்டீபன் நீதிமன்றில் ஆஜர் ஆகியுள்ளார்.