தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் அரசின் பக்கம் தாவியுள்ளார்.
அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
48 கோடிகளுக்கு மேல் கைமாறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில், புளொட் அமைப்பின் தலமைத்துவத்தின் ஆதரவுடனேயே வியாழேந்திரன் அரசின் பக்கம் தாவியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டுள்ள புளொட் அமைப்பையும், வியாழேந்திரனையும், வரும் தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.