வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது – இராணுவத் தளபதி

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது என இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, எல்லா இராணுவ முகாம்களையும் மூட முடியாதென தெரிவித்த இராணுவத் தளபதி, முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்திலும், கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்திலும், படையினர் நிலை கொண்டுள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles