பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி, ஒருவர் காயம்

பளை பிரதேசத்தின் தர்மகேணிப் பகுதியில் நேற்று (18/03) இராணுவத்தின் பிக்கப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

army cab motor bike accident Palai

ஒரு பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது) என்பவர் யாழ் போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles