விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு

அரியாலை வசந்தபுரம் பகுதியில் கடந்த வருடம் (2016) அக்டோபர் மாதம் இனம்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரால் இரு விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று (23/01) யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles